6.3.08

பரமனாம் பக்கத்து வீட்டுக்காரன்.....!!



விரலசைவில் புவி அசைய,
விழிஒளியில் புவி வாழ,

புன்னகை மின்னலாக,
வியர்வை மழையாக,

சரீரம் அண்டமாக,
சாரீரம் ப்ரணவமாக,
இஃது,
ப்ரமாண்டதயே பழக்கமாகக் கொண்டவனை,
இரு ஜான் மூர்த்தியாய் வைத்து,
பலர் பார்க்க,
நால்வர் பல்லக்கு தூக்க,
வீதயுல வருகிறார்கள்,
விந்தை மனிதர்கள்......!






In English.........:

PARAMANAAM PAKKATHU VEETUKKAARAN........

Viralasaivil puviyasaya,
Vizhioliyil puvi vaazha,
Punnagai minnalaaga,
Viyarvai Mazhayaaga,

Sareeram Andamaaga,
Saareeram Pranavamaaga,

Ikdhu,
Brahmaandaththayae Pazhakkamaaga kondavanai,

Iru jaan moorthiyaay vaithu,
Palar paarkka,
Naalvar pallaku thookka,
Veedhiula varugiraargal,
Vindai Manidhargal......!


5.3.08

காதல்.........

சாலை மஞ்சற்குளித்தது,

பூத்துக் குலுங்கும் மரங்களை நினைத்து..!!

In English..:

Saalai Mangal kuliththadhu,

Pooththu kulungum Marangalai Ninaiththu....!!

பிரிவு.............


அக்னி சாட்சியாக,
ஜ்வாலையால் கைகோர்த்து,

வாழ்நாளில் பிரியிலோம் என

உறுதிமொழி எடுத்த இருவர் பிரிந்ததால்,

ஆயிரம் உயிர்ச்சேதம்......!!
பிரித்து அது யாரோ?
- ரயில் தண்டவாளங்களை......?!

In English.........:
Agni saatchiyaaga,
Jwalayaal Kaikoorthu,

Vazhnaalil piriyilom ena

urudhimozhi eduththa iruver pirindhadaal,

Aayiram uyir saedham.....!

Piriththadhu yaaro?

- Rail thandavaalangalai........?!